காட்டுப்பல்லிவால் + கழுதை மூத்திரம் + கடுக்காய் = பான்பராக்; உங்கள் நலன் உங்கள் கையில் பான்பராக் பயன்படுத்துவோர் கவனிக்க பான்பராக்கில் பல்லிவால் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையில் உள்ள சுங்கச்சாவடி (செக்போஸ்ட்)யில் விரைவாக வந்த சரக்குந்து (லாரி) ஒன்று அதிகாரிகளால் நிறுத்தப்படுகிறது. கடத்தல் பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்று சரக்குந்தில் உள்ள மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது கேரளக்காடுகளில் உள்ள மரங்களிலிருக்கும் பெரியபல்லிகள் பாடம் செய்யபட்ட மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர். கேரள வனப்பாதுகாப்புச் சட்டப்படி...