
அரியலூர் : அரியலூர் அருகே சுரங்கங்களுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்ற வந்த லாரிகளை மக்கள் விடிய விடிய சிறைபிடித்தனர். அரியலூர் மாவட்டம் பொய்யூர்,சுண்டக்குடி சாலையில் உள்ளது இடையத்தாங்குடி. இப்பகுதியில் தனியார் சிமென்ட் ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் உள்ளன. இவற்றில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் சிமென்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கல் ஏற்றி செல்கின்றன. இந்த சுரங்கங்களில் இரவில் லாரி இயக்கப்படுவதால் சாலை சேதமாவதுடன், வாகன ஓட்டிகள்,...