Thursday, June 19, 2014
Wednesday, June 18, 2014
பயனுள்ள இணையதளம் : http://www.bayt.com/en/uae/
வணக்கம்.
பயனுள்ள இணையதளம் :
வளைகுடா நாடுகளில் வேலை நமது பகுதி தேடும் நண்பர்கள் இந்த வலைத்தளத்தையும் தொடர்ச்சியாக பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
குறிப்பாக கணிப்பொறி / இன்ஜினியரிங் தொடர்பாக படித்து அனுபவம் உள்ள நண்பர்கள் இந்த இணையதளத்தில் தங்கள் தங்களை பற்றிய விபரங்களை பதிந்துவைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
Link : http://www.bayt.com/en/uae/
Saturday, June 7, 2014
அறிவுரை
முதல் நாள் :
துவாரகா : அப்பா எப்படி இருக்கப்பா? (அம்மா சொல்லிகொடுக்க)
நான் : அப்பா நல்ல இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?
துவாரகா : நான் நல்ல இருக்கேன்ப்பா. அப்பா சாப்பிடீங்களா?
நான் : அப்பா சாப்பிட போகணும், அப்புறம் பாப்பா அம்மா சொல்லுறதை கேக்குறது இல்லையாம், அம்மா சொல்லுறாங்க, இனிமேல் அம்மா சொல்லுவதை கேக்கணும்....
துவாரகா : அம்மா பாப்பாவுக்கு தூக்கம் வருதுமா.....
மறுநாள் :
நான் : பாப்பா எங்கே போனீங்க?
துவாரகா : பாப்பா விளையாட போனேன்.
நான் : அப்புறம் பாப்பா படிக்கிறதே இல்லையாம், எப்போ பார்த்தாலும் பிங்கு பார்த்துகிட்டு இருக்குறதா அம்மா சொல்லுறாங்க... அப்படி எல்லாம் இருக்ககூடாது பாப்பா படிக்கணும்....
துவாரகா : அம்மா அப்பா போனை வச்சுட்டங்கா....
நான் : துவாரகா அப்பா போனை வைக்கல... பேசிகிட்டு தான் இருக்கேன்....
துவாரகா : அம்மா அப்பா என்னோமோ சொல்லுறாங்க....
அடுத்தநாள்:
நான் : பாப்பா பக்கத்துல இருக்கா?
மனைவி : இங்கதாங்க இருக்கா...
நான் : பாப்பாகிட்ட கொடுங்க...
மனைவி : பாப்பா அப்பா உன்கிட்ட பேசணுமா...
துவாரகா : அம்மா பாப்பா பிஸியா இருக்கேன்....
Thursday, June 5, 2014
அரியலூர் மாவட்ட இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
அரியலூர் மாவட்ட இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
By அரியலூர்,
First Published : 05 June 2014 04:54 AM IST
ராணுவப் பணியில் சேருவதற்கு விருப்பமுள்ள அரியலூர் மாவட்ட இளைஞர்கள் அதற்கான முகாமில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவத்தின் பல்வேறு பதவிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 11 ஆம் தேதி காலை 5 மணி முதல் 19 ஆம் தேதி வரை பணியாளர்கள் தேர்வு முகாம் நடைபெறுகிறது.
இதில், சிப்பாய் டெக்னிக்கல் பதவிக்கு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் 11,12 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும். சிப்பாய் பொதுப்பணி பதவிக்கு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் 13, 14 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும்.
சிப்பாய் பொதுப்பணி டிரேட்ஸ் மேன் பதவிக்கு எஸ்எஸ்எல்சி, 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் 14, 15 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும். சிப்பாய் கிளார்க், ஸ்டோர்ஸ் கீப்பர் டெக்னிக்கல் பதவிக்கு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் 15,16 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும்.
முகாமில் பங்கேற்பவர்கள் கல்வித் தகுதிச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், இருப்பிடச் சான்று, ஆங்கிலத்தில் சாதிச் சான்றிதழ் கொண்டுச் செல்ல வேண்டும்.
மெட்ரிக்குலேசன் கல்வித் தகுதி இல்லாத விண்ணப்பதாரர்கள் இடமாற்றம் சான்றிதழ் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் கையொப்பம் பெற்றும், மதிப்பெண் சான்றிதழ் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
விளையாட்டு மற்றும் என்சிசி சான்றிதழ்கள், முன்னாள் படைவீரர் மகன் என்பதற்கு உரிய ஆவணக் காப்பகச் சான்று, அண்மையில் எடுக்கப்பட்ட கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 12 ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். அரியலூர் மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
Wednesday, June 4, 2014
FAEA - BHEL SCHOLARSHIP 2014-2015
அன்பு தம்பி/தங்கைகளுக்கு,
வணக்கம். 2014-2015 கல்வி ஆண்டுக்கான FAEA-BHEL SCHOLARSHIP உதவி தொகைக்கான விளம்பரம் வந்துள்ளது.
விண்ணபிக்க கடைசி நாள் இம்மாதம் 30 தேதி, அதனால் உடனடியாக கீழுள்ள இணையதளத்தில் சென்று மேலதிக விபரங்களை பெற்று தகுதியுள்ள தம்பி/தங்கைகள் வின்னபிக்கவும்.
அன்புடன்
பத்மநாபன்
Saturday, May 31, 2014
இணையத்தில் படித்ததில் பிடித்தது: இதுதான் நம் தேசம்
இணையத்தில் படித்ததில் பிடித்தது... நன்றி : எழுதிய நண்பருக்கு
இதுதான் நம் தேசம்
சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....
பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது...........
சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல
பெண்களிடம் சேலைகள் இல்லை.....
ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....
சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ
சம்பளம்...
ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சு போக
ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....
சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....
சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....
சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....
நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......
பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....
கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்..
கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்..
தேசம்....





















