கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலைக் கல்லூரியில் நடந்த விழாவில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்புடைய 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு எத்தனை "ஜீரோ' என்ற கேள்விக்கு சரியான பதிலளித்த மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. கீழக்கரை அருகே உள்ள முத்துப்பேட்டை கவுசானல் கலை கல்லூரி நிறுவன தின விழா, கல்லூரி செயலாளர் ஜெயராஜ் தலைமையிலும், முதல்வர் ஞானப்பிரகாசம் முன்னிலையிலும் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை ஆடிட்டர் ஜெரால்டு எபினேசர், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நகைச்சுவையுடன் பேசினார்....