My Village

Sunday, February 13, 2011

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை "ஜீரோ'? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலைக் கல்லூரியில் நடந்த விழாவில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்புடைய 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு எத்தனை "ஜீரோ' என்ற கேள்விக்கு சரியான பதிலளித்த மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

 

கீழக்கரை அருகே உள்ள முத்துப்பேட்டை கவுசானல் கலை கல்லூரி நிறுவன தின விழா, கல்லூரி செயலாளர் ஜெயராஜ் தலைமையிலும், முதல்வர் ஞானப்பிரகாசம் முன்னிலையிலும் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை ஆடிட்டர் ஜெரால்டு எபினேசர், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நகைச்சுவையுடன் பேசினார். அப்போது அவர் ,"" 1.76 லட்சம் கோடி ரூபாயில் எத்தனை ஜீரோக்கள் உள்ளது, என்பதை தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாக,'' கூறினார்.

 

இதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டாலும், நீண்டநேரமாக யாரும் பதிலளிக்கவில்லை. அப்போது மாணவி ஆனந்தி ,"10 ஜீரோ,'' என , பதிலளித்தார். பலத்த கரகோஷங்களுக்கிடையே மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பேசிய ஆடிட்டர், "" கடந்த சில நாட்களுக்கு முன் "தினமலர் ' இதழின் முதல் பக்கத்தில் இதற்கான பதில் தெளிவாக வெளியிடப்பட்டதாக,'' தெரிவித்தார்.

 

 

0 comments:

Post a Comment