My Village

Sunday, January 9, 2011

வாழ்க்கையின் வழிகாட்டியாக திருக்குறள்: அப்துல் கலாம்...

ராமேஸ்வரம் : ""எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

 

ராமேஸ்வரம் மண்டபம் ஒன்றியம் எண் 1 நடுநிலைப்பள்ளி வந்த அவர், நூலகம், அறிவியல் ஆய்வகம், கம்ப்யூட்டர் அறைகளை திறந்து வைத்து பேசியதாவது:எனது மனதில் மகிழ்ச்சியான உணர்வு, பூரிப்பை ஏற்படுத்தும் இடம் ராமேஸ்வரம். இப்பள்ளியில் 1937ல் சேர்ந்து, ஆரம்பக் கல்வி முதல் எட்டாவது வரை படித்தேன். உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான்.

 

வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும். கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேல் மாணவர்களை சந்தித்துள்ளேன். நாட்டை வளமான வல்லரசாக உருவாக்க வலியுறுத்தி, மாணவர்களிடம் பேசியுள்ளேன்.அறிவார்ந்த இளைஞர்கள் தங்களது நேரம், அறிவு, ஆற்றலை பயன்படுத்தி, 2020க்குள் அனைத்து துறையிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். மனதில் உறுதி இருந்தால், நீங்கள் வெற்றி அடைவீர்கள்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

 

Nandri Dinamalar.com

 

0 comments:

Post a Comment