My Village

Tuesday, January 25, 2011

கடி ஜோக்ஸ்

மாணவன் 1 ஏணடா தண்ணியிலிருந்து மின்சாரம் எடுக்குறாங்க?

 

மாணவன் 2 இல்லன்னா குளிக்கும் போது சாக் அடிக்கும் அதனாலதான்

 

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?

 

என்ன போகும்னு தெரிஞ்சா மறுபதிவாக இடுங்கள்...!

 

 

கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?

என்ன வித்தியாசம் ?

மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது

==========

நகை போடாம இருக்கிறதே மேல்

ஏன் ?

நகை போடுவது ஃபீமேல்

==========

தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?

என்ன செய்வாங்க ?

முழிச்சிருப்பாங்க

==========

தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?

ஏன் ?

அதைச் சுடுகிறார்கள்

==========

ஏரிக்கு ஆப்போசிட் என்ன ?

என்ன ?

இறங்கி

==========

ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடு

நீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ?

==========

 

இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...

அவ்வளவு கஷ்டமான கதையா ?

ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்

 

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?

அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

-------------------------------------------------------------------------------

 

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

--------------------------------------------------------------------------------

 

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?

கிரண் : தெரியலியே?

கரண் : சுவரொட்டி - தான்.

கிரண் : ?????????

 

ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"

 

"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு

அவசரப்படுத்தினாரு எசமான்..!"

-------------------------------------------

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

 

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

 

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான்,

ஐயா.

0 comments:

Post a Comment