My Village

Monday, January 24, 2011

குறுந்தகவல் குறும்புகள்

"அளவு குறைஞ்சா ரேஷன்

ஆடை குறைஞ்சா பேஷன்

எதை எதையோ குறைச்சு எசகுபிசகாய்

உன்னையும் படைச்சானே... ஈசன்"

 

 

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா

சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.

பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி

இதுவரை முப்பத்தஞ்சு சவரன்

தங்கம் வாங்கியிருக்கியே!"

 

 

*பங்காளி...

நீ உன் மனைவியை

'நின்னா குத்துவிளக்கு...

உட்கார்ந்தா நெய்விளக்கு...

அசைஞ்சா அகல்விளக்கு...

அண்ணாந்தா காமாட்சி விளக்கு...

பார்த்தா விடிவிளக்கு'னு புகழறியாமே...

ஏன் சொல்ல மாட்டே?

உன் மாமனார், நீ கேட்டதெல்லாம்

கொடுக்கிற அலாவுதீன் விளக்காச்சே!

 

 

சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.

 

மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?

 

சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!

 

 

விமானம் இராக்கெட்டைப் பார்த்து,

 

நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

 

இராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........

 

===============

 

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

செல்லினில் பைசா குறயட்டுமே!

ரீசார்ஜ் பண்ணத் தயங்காதே!

எனக்கு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பாதே!

டார்ச்சர் தாங்கல பாவா!

 

குணா கமல்...

சேது விக்ரம்...

சின்னதம்பி பிரபு...

சின்ன ஜமீன் கார்த்திக்...

மூளை வளர்ச்சியில்லாம

முன்னுக்கு வந்தவங்க

நிறய பேரு இருக்காங்க.

நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!

 

 

இசைஞானி, இசைப்புயல்,

தேனிசைத் தென்றல் எல்லாரயும்

மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ!

குறட்டச் சத்தம் தாங்கலடா!

 

 

அன்று... அண்ணலும் நோக்கினான்.

அவளும் நோக்கினாள்!

இன்று... அவனும் நோக்கியா.

அவளும் நோக்கியா!

0 comments:

Post a Comment